இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு - உத்தரப்பிரதேச காவல்துறை அறிவிப்பு
இரவில் தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக காவல்துறை தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவில் தனியாக செல்லும் பெண்கள் உதவி கோரினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக செல்லும் பெண்கள் 112 என்ற எண்ணுக்கு அழைத்து இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் காவல்துறை ரோந்து வாகனத்தில் பணியில் உள்ள பெண் காவலர்களுக்கு தேவையான பயிற்சி, அறிவுரைகளை வழங்க மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் பத்து சதவீதம் வாகனங்களை பெண் காவலர்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.