ஆட்டோ மொபைல் துறையில் மந்தம் இல்லை: போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டி பாஜக எம்.பி, புது விளக்கம்
நாட்டை அவமானப்படுத்துவதற்காக ஆட்டோ மொபைல் துறையில் மந்தம் எனக்கூறுகின்றனர் என்று பாஜக எம்.பி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆட்டோ மொபல் துறையில் சரிவு எதுவும் இல்லை எனவும், தேசத்துக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் அத்தகைய கருத்துக்கள் பரப்ப படுவதாக பாஜக எம்.பி வீரேந்திர சிங் மஸ்ட் பாராளுமன்றத்தில் பேசுகையில் கூறினார்.
மக்களவையில் பேசிய பாஜக எம்.பி வீரேந்திர சிங் மஸ்ட் கூறுகையில், நாட்டினையும், அரசாங்கத்தையும் அவமானப்படுத்துவதற்காக சிலர் ஆட்டோ மொபைல் துறையில் மந்த நிலை நிலவுவதாக கூறுகின்றனர். அப்படி ஆட்டோ மொபைல் துறையில் ஏதேனும் சரிவு இருந்தால், எப்படி சாலைகளில் இத்தனை போக்குவரத்து நெரிசல் எப்படி நிலவுகிறது? என்றார்.