இமயமலை சாரலில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்

நித்யானந்தா தென்-அமெரிக்கா அருகே தனித்தீவு வாங்கி குடிபெயர்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக இமயமலை சாரலில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-12-04 09:57 GMT
புதுடெல்லி

தென்-அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் நித்யானந்தா இறங்கியிருப்பதாக கூறப்பட்டது.

மேலும் தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கத்தில், தான் கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். 

இந்த நிலையில், நித்யானந்தா விவகாரத்தில் திடீர் திருப்பமாக  இமயமலை சாரலில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  நித்யானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இமயமலை பகுதியில் பேசிய நித்யானந்தாவின்  வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், நித்யானந்தாவை, விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்