ராகுல் காந்தி மீது பிரக்யா சிங் அளித்த புகார் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப படலாம் எனத்தகவல்

ராகுல் காந்தி மீது பிரக்யா சிங் அளித்த புகார் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப படலாம் எனத்தகவல்கள் கூறுகின்றன.

Update: 2019-12-02 13:35 GMT
புதுடெல்லி,

 பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர், காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று பேசினார். தனது கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததும், மன்னிப்பு கோருவதாக பிரக்யா சிங் தாகூர் தெரிவித்தார். இதற்கிடையே,  பிரக்யாசிங்கை காங்கிரஸ் எம்.பி , பயங்கரவாதி என்று கடுமையாக விமர்சித்தார்.  ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டது. 

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரக்கோரி  பிரக்யாசிங் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், தன்னை பயங்கரவாதி என்று கூறியது உரிமை மீறல் என்று தனது புகாரில்  பிரக்யா சிங் தாகூர் கூறியிருந்தார். 

இந்நிலையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் அளித்த புகார் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை உரிமைக் குழுவுக்கு இந்தப் புகாரை சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரை செய்தால், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்