எகிப்து,துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு

எகிப்து, துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-12-01 09:18 GMT
புதுடெல்லி,

வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது.  ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். டிசம்பர் பிற்பகுதியில் இருந்து ஜனவரி முதல் தேதிகளுக்குள் வெங்காயம் இந்தியா வந்தடையும். கூடுதலாக எகிப்தில் இருந்தும், டிசம்பர் மத்திக்குள் 6090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்