பீகார்: டிராக்டர் கவிழ்ந்து 6 சிறுவர்கள் பலி

பீகார் மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 சிறுவர்கள் பலியாகினர்.

Update: 2019-11-18 12:29 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம், சரேயா நரேந்திரா கிராமப்பகுதியில் சாலையோரத்தில் சிறுவர், சிறுமிகள் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சலவை கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் சென்றது. அதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருந்தது. வேகமாக சென்றபோது திடீர் என்று டிராக்டரின் டிரைலர் தலைக்குப்புற கவிழ்ந்தது.

அதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மேல் சலவை கற்கள் சரிந்து விழுந்து அமுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 6 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பரோலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் 6 பேரும் 8 முதல் 15 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்