பீகார் பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகள் என அனைவரும் ஒரே கழிவறையை பயன்படுத்துகின்றனர்

பீகார் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவ-மாணவிகள் - பாதுகாப்பு படை வீரர்கள் என அனைவரும் ஒரே பொதுவான கழிவறையை பயன்படுத்துகின்றனர்.

Update: 2019-11-16 06:52 GMT
பாட்னா

பீகார் மாநிலம்  பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் அருகே பஜார் சமிதி சாலையில் அமைந்துள்ள பாபு ஸ்மரக் பெண்கள் உயர்நிலைப்பள்ளி.  இந்த பள்ளிக்கூடம் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சகோதரி சுந்தரி தேவியால் 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

பெண்கள் பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததால், பழுதுபார்ப்பு வேலை காரணமாக 2012 ல் ராஜேந்திர நகரில் உள்ள பஜார் சமிதி சாலையில் உள்ள அரசு சிறுவர் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஆனால் மாணவிகளுக்கு  தேவையான தனி உள்கட்டமைப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை.

இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் சில காலமாக வகுப்புகளைத் புறக்கணித்து  வருகின்றனர்.அவர்கள் பள்ளிக்கு வர தயங்குவதற்கு காரணம் பள்ளிக்கூடத்தில் பெண்களுக்கு என்று  தனி கழிவறைகள் இல்லாததுதான்.

இந்த பள்ளியில்   1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

அதே வளாகத்தில் உள்ள வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடனும்  பாதுகாப்புப் வீரர்களுடனும் அங்கு உள்ள ஒரு கழிவறையைப் பகிர்ந்து கொள்ள பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்