டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்று - மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம்
டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்றின் தரத்தில் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. மிகவும் கடுமையான மாசு அளவான 500-ல் இருந்து தற்போது காற்றின் தரம் 900 என்ற குறியீட்டில் உள்ளது.
என அதில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளை முதல் வாகனக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.