ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் அதிரடி வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்தனர். கைது செய்த பயங்கரவாதியை உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.