டெல்லியில் ஹவாலா பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு
டெல்லியில் தொழில் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி ஹவாலா பண பரிமாற்றம் நடைபெற்றது கண்டுப்பிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் அரசின் இ-சேவை மையம் நிதி திட்டங்களில் ஈடுபட்டு வரும் பிற துறைகளில் தொழில் நிறுவனத்தில் ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுவதாக வருமானவரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நிறுவனத்திற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஹவாலா பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.