இந்தியா–பாக். எல்லையில் பறந்த ஆள் இல்லா ‘குட்டி’ விமானங்கள்
இந்தியா–பாக். எல்லையில் ஆள் இல்லா ‘குட்டி’ விமானங்கள் பறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரோஸ்பூர்,
பஞ்சாப் மாநிலம், இந்தியா–பாகிஸ்தான் எல்லையான உசைனிவாலா பகுதியில் ஆள் இல்லா ‘குட்டி’ விமானங்கள் பறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
3 விமானங்கள் பறந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த அந்த விமானத்தை நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்த இயலவில்லை.
அதேபோன்று இந்த மாத தொடக்கத்தில், பஸ்தி ராம் லால், தெண்டிவாலா, கஜாராசிங் வாலா போன்ற கிராம பகுதிகளிலும் ஆள் இல்லா ‘குட்டி’ விமானங்கள் பறந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.