மத்திய பிரதேசத்தில் 2-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம்

மத்திய பிரதேசத்தில் 2-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்தது.

Update: 2019-10-20 20:04 GMT
போபால்,

மத்திய பிரதேச மாநிலம், டிகாம்கார் நகரில் பாரி ஜெயின் என்ற 3 வயது ஆண் குழந்தை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் 2-வது மாடியின் உச்சியில் இருந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டது.

அப்போது அந்த குறுகலான சாலையில், மனோகர் பட் என்பவர் தனது சைக்கிள் ரிக்‌ஷாவை தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அந்த ரிக்‌ஷாவின் இருக்கையில் குழந்தை வந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த குழந்தையின் தந்தை ஆசிஷ் ஜெயின் கூறுகையில், “என் குழந்தையை மனோகர் பட் தேவதையாக வந்து காப்பாற்றி இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்