ப.சிதம்பரம் எடை 5 கிலோ குறைந்தது - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் தகவல்

ப.சிதம்பரத்தின் எடை 5 கிலோ குறைந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-18 21:42 GMT
புதுடெல்லி,

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய அவரது வக்கீல் கபில்சிபல், ப.சிதம்பரத்தின் எடை குறைந்து விட்டதாக கூறினார்.

“74 வயதான ப.சிதம்பரம் 43 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் மருந்து சாப்பிட்டார். 73.5 கிலோவாக இருந்த அவரது எடை தற்போது 68.5 கிலோவாக குறைந்து விட்டது” என்று அப்போது கபில் சிபல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்