அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள் நாடு கடத்தல் - டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.

Update: 2019-10-18 21:06 GMT
புதுடெல்லி,

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் மெக்சிகோ சென்று, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக ஊடுருவி வந்தனர்.

இப்படி பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவினுள் ஊடுருவ மெக்சிகோ எல்லையை பயன்படுத்தினால், மெக்சிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மெக்சிகோ, தனது எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு பெண் உள்பட 311 இந்தியர்கள் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதற்காக மெக்சிகோவுக்கு சென்றனர். அவர்களை எல்லைப்பகுதியில் பிடித்த மெக்சிகோ நிர்வாகம், உடனடியாக விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தது.

அவர்கள் அனைவரும் நேற்று காலை 5 மணிக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

மேலும் செய்திகள்