டெல்லி வாகன கட்டுப்பாடு திட்டம் ; மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி வாகன கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

Update: 2019-10-16 07:10 GMT
புதுடெல்லி,

காற்று மாசுபடுவதை குறைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு டெல்லியில் வாகன கட்டுப்பாடு திட்டமாக ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தபட்ட பிறகு டெல்லியில் காற்று மாசுபடுவது கணிசமாக குறைந்திருப்பதாக டெல்லி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.

கடந்த மாதம் செப்டம்பர் 13-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்கான 7 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், "தலைநகர் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டைக் குறைக்க மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

தற்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி வாகன கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்