மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களின் பேரன்புக்கு உரியவராக விளங்கியவரும் மக்கள் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டவருமான மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கனவைக் கண்ட அப்துல் கலாம், அந்த நோக்கத்திற்காக தனது சிறந்த பங்களிப்பை அளித்தார். கலாமின் வாழ்க்கை சக நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா அவரை வணங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.