குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுக்கும் சர்வதேச கும்பலுடன் சென்னையை சேர்ந்தவர் உள்பட 7 பேருக்கு தொடர்பு
குழந்தைகள் வைத்து ஆபாச படம் எடுக்கும் சர்வதேச கும்பலுடன் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 7 இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளது.
புதுடெல்லி,
குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் ஜெர்மன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த சர்வதேச கும்பலுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சிபிஐ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழு இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. 7 இந்தியர்கள் குழந்தைகளை வைத்து ஆபாச வீடியோ எடுக்கும் சத்வதேச கும்பலுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இந்த 7 பேரும் டெல்லி, சென்னை ஃபரிதாபாத்தில் அமர்நகர், சாஹிபாபாத்தில் பசொண்டா, ஹவுராவில் பட்டாச்சார்யா பரா லேன் ராஜஸ்தானில் சோமு மாவட்டம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள மூலம் சிறுவர்களின் ஆபாச படங்களை வெளியிட்டு உள்ளனர். சில இந்திய மொபைல் எண்கள் மூன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களின் பகுதியாக இருந்தன.
ஜனவரி 31 ம் தேதி ஜெர்மன் தூதரகத்திலிருந்து வந்த தகவல் அடிப்படையில், சிபிஐ முதற்கட்ட விசாரணையை நடத்தியது மற்றும் செப்டம்பர் பிற்பகுதியில் வழக்குப்பதிவு செய்தது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் குழுக்களில் 483 உறுப்பினர்கள் இருந்து உள்ளனர். இதில், செயலில் உள்ள ஏழு உறுப்பினர்கள் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
விசாரணையின் போது, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.