நாக்பூரில் ரூ.16 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை
நாக்பூரில் ரூ.16 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
நாக்பூர்,
நாக்பூர் மாவட்டம் கடோல் டவுணில் “பாங்க் ஆப் மகாராஷ்டிரா” வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதிகாலை அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். மேலும் வங்கியின் சர்வரில் இருந்து ஏ.டி.எம். எந்திரத்திற்கான தொடர்பை துண்டித்தனர். அதன்பிறகு ஏ.டி.எம். எந்திரத்தை அலாக்காக பெயர்த்து எடுத்தனர். அந்த எந்திரத்தை வாகனத்தில் ஏற்றி கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போன ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.16 லட்சம் இருந்தது.
இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.