மத்தியபிரதேசத்தில் கார் விபத்து : 4 தேசிய ஹாக்கி வீரர்கள் பலி

மத்தியபிரதேசத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் தேசிய அளவில் விளையாடும் 4 ஹாக்கி விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2019-10-14 04:48 GMT
ஹோஷங்காபாத்,

மத்தியபிரதேச மாநிலம் இட்ரசி நகரிலிருந்து ஹோஷங்காபாத் நகரத்துக்கு ​​தியான் சந்திர டிராபி ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக 7 ஹாக்கி விளையாட்டு வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கார், ரைசல்பூர் கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.  

இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த ஹாக்கி வீரர்களில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்த வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்