சீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஜி ஜின் பிங்கிடம் கேளுங்கள்: பிரதமர் மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

சீனாவின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பிக் கொடுக்க வேண்டும் என ஜி ஜின்பிங்கிடம் கேளுங்கள், 56 இஞ்ச் மார்பை காட்டுங்கள் பிரதமர் மோடி என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-10-11 07:40 GMT
புதுடெல்லி,

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை மாநகரமே புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது  டுவிட்டர் பதிவில்  கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து கபில் சிபல் தனது டுவிட்டர் பதிவில்,  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆதரிக்கிறார். 

எனவே ஜி ஜின்பிங்கை சந்திக்கும்போது பிரதமர் மோடி இதனை கூற வேண்டும். 

1) சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5000 கிலோ மீட்டர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். 2) இந்தியாவில் 5 ஜிக்காக ஹவாய் இருக்காது என கூற வேண்டும்.  உங்கள் 56 இஞ்ச் மார்பை காட்டுங்கள் மோடி’’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்