இந்திய விமான படை தினம்; தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை
இந்திய விமான படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,
நாட்டில் இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை அடுத்து புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் அருகே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 87வது இந்திய விமான படை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.