ஆந்திரா படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

ஆந்திரா படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-10-05 20:28 GMT
புதுடெல்லி,

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் கடந்த மாதம் 15-ந் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 28க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆந்திரா படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திராவை சேர்ந்த ஜி.வி.ஹர்ஷகுமார் என்பவரது சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஆந்திர படகு விபத்தில் காணாமல் போனவர்களையும், மாயமான படகையும் கப்பல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு ஆணையத்தின் உதவியுடன் மீட்டெடுக்கவும், நாடு முழுவதும் படகு பயணம் தொடர்பாக பொதுவான விதிமுறை களை உருவாக்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்