வருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
வருமான வரித்துறையில் 15 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்தியில் மோடி அரசு பதவிக்கு வந்தது முதலே மத்திய அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது மத்திய அரசு. இந்நிலையில் கட்டாய ஓய்வு என்ற சாட்டையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. அந்தவகையில் சி.பி.டி.டி. எனப்படும் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர், மற்றும் இளநிலை மற்றும் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து 15 அதிகாரிகளுக்கும் கட்டாய ஒய்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.