சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் சரண்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

Update: 2019-10-03 15:53 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ.2,500 கோடி அளவிலான சாரதா சீட்டு மோசடி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் முதலில் புலன் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரில் வைத்து ராஜீவ் குமாரிடம் 5 நாட்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  இதைத் தொடர்ந்து அவர் அலிப்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு சுப்ரதா முகர்ஜி முன்னிலையில் இன்று  சரண் அடைந்தார். அவர் 2 ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தி ஜாமீன் பெற்றார்.

மேலும் செய்திகள்