புதுடெல்லியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மலரஞ்சலி

புதுடெல்லியின் ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-10-02 03:01 GMT
புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு புதுடெல்லியின் ராஜ்காட்டில் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலரஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

மேலும் செய்திகள்