பீகார் கன மழைக்கு நட்சத்திரமே காரணம் - மத்திய மந்திரி சொல்கிறார்

பீகார் கன மழைக்கு நட்சத்திரமே காரணம் என மத்திய மந்திரி அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-30 22:06 GMT
புதுடெல்லி,

பீகாரில் பெய்துவரும் கனமழை குறித்து மத்திய மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:-

பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு குறிப்பிட்ட நட்சத்திரம் தான் காரணம். இந்த நேரத்தில் சில சமயம் மிகவும் அதிகமான மழை பெய்யும். இந்த மழை இப்போது இயற்கை பேரிடராக மாறியுள்ளது. மாநில அரசும், முதல்-மந்திரியும் அவரது குழுவினரும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்