உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி: ராவத் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி

உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹரி‌‌ஷ் ராவத் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

Update: 2019-09-30 19:14 GMT
நைனிடால்,

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹரி‌‌ஷ் ராவத். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஒரு போட்டி எம்.எல்.ஏ.வின் ஆதரவை பெறுவதற்காக பேரம் பேசும் ரகசிய வீடியோ 2016-ம் ஆண்டு வெளியானது. இதுதொடர்பாக சி.பி.ஐ. முதல் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி துலியா, சி.பி.ஐ. மேற்கொண்டு விசாரணை நடத்தி ஹரி‌‌ஷ் ராவத் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கினார். வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்