‘நீதித்துறையில் நியமனம், இடமாற்றங்கள் முக்கியமானவை’ - வக்கீல்கள் சங்க மனு மீது சுப்ரீம் கோர்ட்டு கருத்து

நீதித்துறையில் நியமனம், இடமாற்றங்கள் முக்கியமானவை என வக்கீல்கள் சங்க மனு மீது சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-09-23 22:45 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் (நீதிபதிகள் நியமன குழு) மும்பை ஐகோர்ட்டு நீதிபதி அகில் குரேஷியை மத்திய பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. பின்னர் அவரை திரிபுரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக குஜராத் ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு ஒன்றில், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி அகில் குரேஷி இடமாற்றம் பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அரவிந்த் தாதரிடம், நீதித்துறை நிர்வாகத்தில் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்கள் முக்கியமானவை என்றும், இதில் தலையிடுவது சரி அல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்