அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு

அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-09-23 09:22 GMT
பல்லியா,

உத்தர பிரதேசத்தின் பைரியா சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்.  இவர் மீது மாநில மின் துறை பொறியியலாளர் ஒருவர் போலீசில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார்.  அதில், தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது புகார் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்த மாத தொடக்கத்தில், மின் துறையில் பொறியியலாளராக உள்ள ராம் கிஷோர் என்பவரை மொபைல் போன் வழியே தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. சிங், இளநிலை பொறியியலாளர் ஒருவரை பணி இடமாற்றம் செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.

அதில் பல கஷ்டங்கள் உள்ளன என கிஷோர் கூறியுள்ளார்.  இதற்கு கிஷோரை தகாத சொற்களால் திட்டிய எம்.எல்.ஏ., உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டியும் உள்ளார் என கிஷோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

அவர் அளித்த புகாரின் நகல்கள் மற்றும் உரையாடல்களின் ஆடியோ ஆகியவற்றை துறையின் மூத்த அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்