காரை விட்டு இறங்காத அதிகாரிக்கு மத்திய மந்திரி கண்டிப்பு
காரை விட்டு இறங்காத அதிகாரி ஒருவரை மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கண்டித்தார்.
பாட்னா,
மத்திய மந்திரி கிரிராஜ் சிங், பீகார் மாநிலம் பெகுசாரை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 நாட்களாக அவர் சுற்றி பார்த்தார். நேற்று ஓரிடத்தில் அவர் தன்னுடைய ஆதரவாளர்கள், உள்ளூர் மக்கள் புடைசூழ நடந்தபடி வெள்ள பகுதிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு காரில் கோட்டாட்சியர் நிஷாந்த் என்பவர் இருந்தார். அவரை நோக்கி மத்திய மந்திரி கிரிராஜ் சிங் ஏதோ கேட்டபோது, நிஷாந்த், காரை விட்டு இறங்காமல் பதில் அளித்தார். இது, கிரிராஜ் சிங்குக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது, கிரிராஜ் சிங், “அவர் எதற்காக இறங்குவார்? அவர் அதிகாரி. அதனால் கை கூப்பி வணங்குகிறேன்” என்று கிண்டலாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரி நிஷாந்த், காரை விட்டு இறங்கி வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு கிரிராஜ் சிங், “உங்கள் மீது மக்கள் ஏராளமான புகார் கூறுகிறார்கள். அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவி அளியுங்கள். நிவாரண முகாம் அமைக்காவிட்டால், உங்கள் வீட்டு முன்பு தர்ணா நடத்துவேன். மேலும், முதல்-மந்திரியிடமும் பேசப் போகிறேன். எனவே, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்” என்று கண்டிப்புடன் கூறினார்.