டெல்லி ஆக்ரா விரைவுச்சாலையில் இந்த ஆண்டு 150 பேர் விபத்துகளில் பலி
டெல்லி ஆக்ரா விரைவுச்சாலையில் இந்த ஆண்டு 150 பேர் விபத்துகளில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா விரைவுச் சாலை, டெல்லியையும், ஆக்ராவையும் இணைக்கும் 165 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இச்சாலையில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் 360 விபத்துக்களில் 154 பேர் பலியாகி உள்ளனர். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 822 ஆகும்.
கடந்த 2018-ம் ஆண்டு 659 விபத்துக்களில் 111 பேர் பலியாகி இருந்தனர். இதில் 1,400 பேர் காயம் அடைந்தனர். பெரும்பாலான விபத்துகள் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதாலும், டயர்கள் வெடிப்பதாலும் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கும், விபத்துக்களை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யமுனா விரைவுச் சாலை தொழில் மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.