பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2019-09-21 12:08 GMT
புதுடெல்லி,

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இந்த சூழலில், மராட்டியம் மற்றும் அரியானா சட்டமன்ற தேர்தல்களில் கட்சிகள் தங்கள் சின்னம் மற்றும் வேட்பாளர்களை பிரபலப்படுத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு  தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் இன்று சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,  அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பாளர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் சுனில் அரோரா பேட்டியின் போது தெரிவித்தார்.  அரியானா மற்றும் மராட்டியத்தில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  ஒரே கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்