பஞ்சாப்பில் 4 வயது குழந்தையை திருட முயன்ற நபர் கைது ; வீடியோ வெளியீடு
பஞ்சாப் மாநிலத்தில் உறவினர்களுடன் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை திருட முயன்ற நபரின் வீடியோ வெளியிடப்பட்டது.
லூதியானா,
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ரிஷி நகரில் 4 வயது குழந்தை தனது தாயுடன் வீட்டிற்கு வெளியே நள்ளிரவு 1 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது, அந்த தெரு வழியே சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார்.
அவர் தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அந்த 4 வயது குழந்தையை திருடி தனது சைக்கிளில் வைத்துள்ளார். அப்போது, குழந்தை அருகே தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு பெண் கண் விழித்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனே, குழந்தையை அந்த நபரின் சைக்கிளில் இருந்து மீட்டவுடன் கூச்சலிட்டார். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தாய் சத்தம் கேட்டு எழுந்து அந்த மர்ம நபரை விரட்டி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பக்கத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.