பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Update: 2019-09-17 07:45 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் , ”நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று சோனியா காந்தி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்