சிறப்பு மற்றும் வேகம்: மேம்பட்ட தரத்தில் ‘நமோ’ ஆப்

சிறப்பு மற்றும் வேகமாக செயல்படும் விதத்தில் ‘நமோ’ ஆப்பின் தரம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2019-09-16 19:30 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ செயலியாக (ஆப்) ‘நமோ’ ஆப் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பிரதமர் மோடியுடன் உரையாடலாம். மத்திய அரசு திட்டங்கள் குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்நிலையில், இந்த செயலி தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. செயலியின் புதிய வடிவத்தை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய செயலி, இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகின்றன. பிரதமரிடம் இருந்து செய்திகளையும், மின்னஞ்சல்களையும் நேரடியாக பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்