கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி ; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா

கன்னட மொழியும் கன்னட கலாச்சாரமும் முக்கியம் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-16 12:27 GMT
பெங்களூரு,

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரியும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், 'இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். 

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி  என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது, அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்