பஞ்சாப் மாநிலத்தில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலத்தில் புதுமண தம்பதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-09-15 19:01 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா தல்லா என்ற கிராமத்தைச் சேர்ந்த அமன்பிரீத் கவுர் (வயது 23) என்ற இளம்பெண் தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக, அதே ஊரைச் சேர்ந்த அமன்தீப் சிங் (24) என்பவரை 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அமன்பிரீத் கவுரின் உறவினர்கள் சிலர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் கணவன்-மனைவி இருவரும் பலி ஆனார்கள்.

இது தொடர்பாக அமன்பிரீத் கவுரின் குடும்பத்தினர் 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இது கவுரவ கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்