ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை - அமலாக்கத்துறை சம்மன்
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, அவரிடம் கூடுதல் தனிச்செயலாளராக பணிபுரிந்தவர் டெல்லியை சேர்ந்த கே.வி.கே.பெருமாள்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அவரிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கே.வி.கே.பெருமாளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே திங்கட்கிழமையன்று சி.பி.ஐ. இவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.