“அதிகாரிகளை தவிர்த்து என்னை மட்டும் கைது செய்தது ஏன்?” - குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில் ப.சிதம்பரம் பதிவு
அதிகாரிகளை தவிர்த்து என்னை மட்டும் கைது செய்தது ஏன் என குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடி, தன் குடும்பத்தினர் மூலமாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் நேற்று ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
என் சார்பாக கீழ்கண்ட பதிவை வெளியிடுமாறு என் குடும்பத்திரை கேட்டுக் கொண்டுள்ளேன். “ஐ.என்.எக்ஸ். விவகாரத்தில் கோப்புகளை பரிசீலித்து சிபாரிசு செய்த ஒரு டஜன் அதிகாரிகள் யாரும் கைதாகவில்லை, நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? இறுதி கையெழுத்து போட்டதாலா?” என்று என்னிடம் மக்கள் கேட்கிறார்கள். அதற்கு எனக்கு விடை தெரியவில்லை.
எந்த அதிகாரியும் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, யாரும் கைது செய்யப்படுவதை நான் விரும்பவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.