முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் மீது சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு புகார் - பரபரப்பு பேட்டி
முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் என்னை கற்பழித்தார் என்று சட்ட கல்லூரி மாணவி பகிரங்கமாக பேட்டி அளித்தார்.
ஷாஜகான்பூர்,
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், உத்தரபிரதேசத்தில் ஆசிரமம் மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறார்.
அவர் நடத்தி வரும் சட்ட கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டம் படிக்கும் ஒரு மாணவி, கடந்த மாதம் 23-ந் தேதி சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், சாந்த் சமூகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தன்னை துன்புறுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மறுநாள் அவர் காணாமல் போய்விட்டார்.
பின்னர், அந்த மாணவியின் தந்தை, ஷாஜகான்பூர் போலீசில் சின்மயானந்த் மீது புகார் கொடுத்தார். தன் மகளை அவர் கற்பழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கடந்த மாதம் 27-ந் தேதி, சின்மயானந்த் மீது போலீசார் ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, காணாமல் போன மாணவி, ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, போலீஸ் ஐ.ஜி. நவீன் அரோரா என்பவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, மாணவியிடம் விசாரணை நடத்தியது. சின்மயானந்தின் வீடு, ஆசிரமம் மற்றும் கல்லூரிக்கும் சென்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சட்ட கல்லூரி மாணவி, நேற்று முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன்பு பகிரங்கமாக பேட்டி அளித்தார். அவரது முகம், கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது. அவர் கூறியதாவது:-
சுவாமி சின்மயானந்த் என்னை கற்பழித்தார். ஓராண்டாக என்னை உடல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். அவர் எண்ணற்ற இளம்பெண்களை சீரழித்துள்ளார். ஆனால் நான் மட்டுமே துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறேன்.
அவருக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. உரிய நேரத்தில், வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை அளிப்பேன்.
சிறப்பு புலனாய்வு குழு என்னிடம் 8-ந் தேதி 11 மணி நேரம் விசாரணை நடத்தியது. கற்பழிப்பு பற்றி சொன்னேன். எல்லா விவரங்களையும் சொல்லியும், சின்மயானந்தை இன்னும் கைது செய்யவில்லை. நான் டெல்லி போலீசில் கொடுத்த புகாரை, அவர்கள் ஷாஜகான்பூர் போலீசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சின்மயானந்த் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யவில்லை.
என் தந்தை போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தபோது, மாவட்ட கலெக்டர் மிரட்டி உள்ளார். நான் ரூ.5 கோடி கேட்டதாக சின்மயானந்தின் வக்கீல் கூறுவது பொய் குற்றச்சாட்டு. அதுபற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.