வளைகுடா நாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்பில்’ முத்தலாக் கொடுத்தவர் மீது மனைவி புகார்

வளைகுடா நாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்பில்’ முத்தலாக் கொடுத்தவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

Update: 2019-09-09 20:08 GMT
காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் குட்லு கிராமத்தை சேர்ந்தவர் பி.எம்.முசரப். இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வருகிறார்.

அங்கு இருந்தபடியே இவர், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்று முறை சொல்லி, அதை வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து அனுப்பி மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி இந்த வாட்ஸ்-அப் தகவல் அனுப்பப்பட்டது. கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், அந்த பெண் தற்போது தன்னுடைய கணவர் மீது போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். தன்னுடைய சகோதரரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் சொல்லி, கணவர் அனுப்பியதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

முத்தலாக் தடைச் சட்டம் வந்த பிறகு இங்கு பதிவாகும் 2-வது வழக்கு இது. இதற்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம் முக்கோம் பகுதியை சேர்ந்த இ.கே.உசாம் என்பவர் தன்னுடைய மனைவியின் பெற்றோர் முன்பே முத்தலாக் கூறினார். இதையடுத்து தாமசேரி சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்