கபில்தேவ் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்
டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்துக்காக, கபில்தேவ் வீட்டுக்கு நேரில் சென்று கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
புதுடெல்லி,
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்துறை பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த பிரசாரத்தில் பங்கேற்குமாறு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவர் அழைப்பு விடுத்தார். முன்னதாக சமூக வலைத்தளம் மூலமாகவும் கபில்தேவுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். கெஜ்ரிவாலின் அழைப்பை ஏற்ற கபில்தேவ், வருகிற 15-ந்தேதி முதல் இந்த பிரசாரத்தில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
இது தொடர்பாக பின்னர் அவர் கூறுகையில், ‘இது ஒரு மிகப்பெரிய முயற்சி. இதுபோன்ற ஒரு பொறுப்பை ஏற்றதற்காக முதல்-மந்திரிக்கு வாழ்த்துகள். இது டெல்லி மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை என நான் நினைக்கிறேன். நோயை தடுப்பதைவிட வேறு என்ன முக்கியமாக இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.