வங்கி மோசடி குற்றவாளிகள் 147 பேருக்கு எதிராக நடவடிக்கை - பாரத ஸ்டேட் வங்கி தகவல்

வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்க வங்கி மோசடி குற்றவாளிகள் 147 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-09-08 20:11 GMT
புதுடெல்லி,

பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டு புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பாரத ஸ்டேட் வங்கி பதில் எழுதியுள்ளது. அதில், ‘கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் மட்டும் கடன் மோசடி குற்றவாளிகள் 147 பேர் மீது நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடாமல் தடுப்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்குமாறு குடியுரிமைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக, இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட 49 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டதாக கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்