ராம் ஜெத்மலானி மறைவு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில், “இந்தியாவின் தலை சிறந்த வக்கீல்களில் மிகவும் புகழ் பெற்றவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம் ஜெத்மலானி உடல்நல குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம். அவரின் அரும்பணிகளை இந்திய நாடு இன்னும் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இரங்கல் செய்தி #RIPRamjethmalanipic.twitter.com/jcxaKXKoH8
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 8, 2019