ஓய்வின்றி உழைத்து வருகிறது மோடி அரசு: மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாஜக அரசு 2வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை அக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தின் சிறப்புகள் குறித்தும் அவர்கள் பரப்பி வருகின்றனர். இதற்காக முக்கிய மந்திரிகளிடம் தகவல்கள் கேட்டு பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் சாதனை மலர் தயாராகி வருகிறது.
இதில் காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஏ ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆகியவை முக்கிய சாதனைகளாக இடம்பெறுகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:-
2-வது முறையாக பதவியேற்ற நாள் முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும், பதவியேற்ற 100 நாட்களில் மோடி அரசு செய்துள்ள பணிகள் யாருடனும் ஒப்பிட முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.