காஷ்மீரில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப். வீரர் பலி

காஷ்மீரில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானார்.

Update: 2019-09-07 19:13 GMT
ஜம்மு,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.பி. நாயர். சி.ஆர்.பி.எப். தலைமைக்காவலரான இவர் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பணியில் இருந்தார்.

இந்தநிலையில், அவர் நேற்று குடியிருப்பு பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்கம்பியை தொட்டதால், அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாயரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்