பல் மருத்துவ படிப்புக்கான நீட் கட்-ஆப் குறைப்பு : இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

2019-2020 கல்வியாண்டின் பல் மருத்துவ படிப்புக்கான நீட் கட்-ஆப்ஐ இந்திய பல் மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது.

Update: 2019-09-07 06:59 GMT
புதுடெல்லி,

இந்திய பல் மருத்துவ கவுன்சில் பி.டி.எஸ். படிப்புக்கான நீட் கட்-ஆப்ஐ குறைத்துள்ளது. பி.டி.எஸ் படிப்புக்கான நீட் கட்-ஆப்ஐ குறைப்பதன் மூலம் கூடுதல் மாணவர்கள் தகுதி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

பல் மருத்துவ கவுன்சில் பொதுவாக ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத மதிப்பெண்களை குறைத்துள்ளது. குறிப்பாக ஓ.பி.சி, எஸ்டி, மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகவும் குறைத்துள்ளது.

பல் மருத்துவ படிப்புக்கான நீட் கட்-ஆப்  மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது 2019-2020 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்று கவுன்சில் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்