சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி -மம்தா பானர்ஜி

சந்திரயான்-2 பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

Update: 2019-09-06 12:18 GMT
கொல்கத்தா

மேற்கு வங்க மாநில மாநில சட்டசபையில் பேசிய மம்தா பானர்ஜி, "சந்திரயான் ஏவுதல் நாட்டில் முதன்மையானது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இதுபோன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது போன்றும் செயல்படுகின்றனர். இது பொருளாதார பேரழிவிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி ஆகும்.

நீங்கள் சந்திரயானை சந்திரனுக்கு அனுப்புங்கள் அங்கு பல கதைகளை உருவாக்குங்கள் என கூறினார்.

மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு ட்விட்டரில் எதிர்மறையான  விமர்சனங்களே கிடைத்து உள்ளது. பலரும் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பங்கஜ் அகர்வால் என்பவர் பெண்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடைவது இல்லை  என கூறி உள்ளார்.



அமித் சிங் என்பவர் வரம்பற்ற வெறுப்பு. அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும் நாட்டை எதிர்ப்பதற்கும் இடையிலான எல்லை மறைந்துவிட்டது என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்