காஷ்மீரில் ரெயில்கள் ரத்து: ரெயில்வேக்கு ரூ.1 கோடி இழப்பு
காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி கடந்த மாதம் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் கடந்த 32 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. வடக்கு காஷ்மீரிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.