திகார் சிறையில் மகன் அடைக்கப்பட்ட அறையில் ப.சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில், டெல்லியில் உள்ள பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய ஜெயிலான திகார் ஜெயிலில் 7-வது எண் சிறையில் உள்ள தனி அறையில் ப.சிதம்பரம் நேற்று மாலை அடைக்கப்பட்டார்.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இதே அறையில்தான் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் 12 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அறையில் இப்போது ப.சிதம்பரமும் உள்ளார்.
ப.சிதம்பரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அவரது அறையில் அடைக்கப்பட்டு இருப்பார். அவருக்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்படும். இரவு உணவாக ரொட்டி, பருப்பு, காய்கறி கூட்டு, அரிசி சாதம் வழங்கப்படும்.